Skip to main content

Posts

Featured

எதற்காக? (அ) யாருக்காக?!

Blog spot தொடங்கியாகிவிட்டது.இனி எழுத வேண்டும். எதற்காக அல்லது யாருக்காக? பலரும் படிக்குமளவு என் எழுத்தோ நானோ பிரபலமல்ல! பின் எதற்காக இந்த வலை மேடை? ( blog-க்கு நான் கொடுக்கும் பெயர் ). பொதுவாகவே என்னால் பேசாமல் இருக்க முடியாது.பல சிந்தனைகள், பலப்பல கேள்விகள். இன்றைய நவீன யுகத்தில், அருகிலிருப்பவரிடமே ஆர்குட்டில்தான் பேசமுடிகிறது!ஆகவே நானும் அவ்வாறே எனது பேச்சுக்களை,பதிவு செய்ய ,விரும்புவோர் (மட்டும்) படிக்க உகந்த வழியில் வலை மேடை அமைக்க முடிவு செய்தேன். திறைத்துறைக்கு வந்த பிறகு நிறையவே எனது நட்பு வட்டம் பெருகிவிட்டது. எனது பார்வையை அறிந்துகொள்ள யாரேனும் ஆவலாய் இருக்கக் கூடும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற உத்வேகமும் இருக்கிறது. சிந்தனைகளைச் சிதற விடாமல், செதுக்கி, வடிவம் கொடுத்து, பகிர்தலினால் பக்குவப்படுத்தி, பயனுறச் செய்யமுடியும். அப்பாவியின் நேர்மை, அழகான பெண்னின் பணிவு, அறிவாளியின் பொறுமை, என எத்தனையோ விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. உலகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற நமது கோட்பாடுகள் சிதறுகிறது. ஏன் இப்படி இருக்கிறது என்று குழப்புகிறது. ஏன் இர...

Latest Posts

முதல் குரல்